

திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போதே தெரிவித்திருந்தார். அதற்காக தான் பல பொய் புகார்களை முன்னதாகவே ஆளுநர் வரை கொடுத்துவைத்திருந்தார். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் மக்கள் சேவகராக 5 முத்தான திட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே கேப்பில் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் மற்றும் மோசடி புகார்களை தூசு தட்டவும் காவல்துறைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் தான் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்த உத்தரவிட்டுள்ளனர். அடுத்த இலக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதலாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தான் என்ற தகவலும் கசிந்துள்ளது.
அடுத்தடுத்து மாஜி அமைச்சர்கள் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு திமுக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டதுள்ளதை அறிந்த அதிமுக தலைமை உஷாரானது. உடனடியாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் டெல்லி புறப்பட்டனர். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், அதிமுகவை டேமெஜ் செய்ய திமுக தீட்டும் சதியைப் பற்றியும், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் அனைத்துமே போலி என்றும் எடுத்துரைத்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என அமித் ஷா கைவிரித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.


உண்மையில் அமித் ஷா போட்டுள்ள திட்டமே வேறு எனக்கூறப்படுகிறது. திமுக எப்படி அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பட்டியலை தூசு தட்டி எடுத்துள்ளதோ, அதே போல் திமுகவின் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது அமலாக்கத்துறை கைவசம் இருக்கும் புகார்களை தூசு தட்டி எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகளும் கசிந்துவருகிறது.
அதனைத் தொடர்ந்து தான் இரு தினங்களுக்கு முன்பு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல் திமுக தரப்பில் பல முக்கிய தலைகளின் வழக்குகள் தூசு தட்டப்பட்டு வருவதாக செய்தி கசிந்து வருகிறது.

