• Fri. Apr 18th, 2025

திடீரென அதிகரிக்கும் கொரோனா… வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!…

By

Aug 15, 2021

திருவண்ணாமலையில் திடீரென அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக வணிகர்கள் கடைகளை மூட முடிவெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் கோரதாண்டவம் சற்றே தணிந்திருந்த நிலையில், தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது வணிகர்கள், சிறு, குறு வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

எனவே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள் அனைத்தையும் வரும் 16ம் தேதி முதல் 7 நாட்களுக்கு மாலை 5 மணிகு மேல் மூட ஒத்துழைப்பு அளிப்பதாக வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதனை அடிப்படையாக கொண்டு கொரோனா தொற்றின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக வரும் திங்கட்கிழமை முதல் திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் ஒரு வார காலத்திற்கு மாலை 5 மணிக்குள் முடித்து கொள்ளும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.