• Fri. Feb 14th, 2025

சென்னை மெரினாவில் மீண்டும் சிவாஜி சிலை ரசிகர்கள் கோரிக்கை!…

Byadmin

Jul 23, 2021

சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசனுக்கு மீண்டம் சிலை அமைக்க என்ற கேரிரக்கையை மதுரை  ரசிகர்கள் எழுபபியுள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 20 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதேபோல் காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனதா தளம் சார்பில் செல்லபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மதுரை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாணவர்களை வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து பசும்பொன் பாண்டியன் வல்லரசு பார்வர்ட் பிளாக் தலைவர் அமாவாசை மற்றும் சிவாஜி ரசிகர்கள் மற்றும் பிரபு ரசிகர்கள் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சந்திரசேகரன் சிவாஜி ரசிகர் செய்தியாளர் கூறும்போது முன்பு சென்னை மெரினா பல்க் அருகில் சிவாஜி சிலை இருந்தது அந்த சிலையை அப்புறப்படுத்தி சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது மீண்டும் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் சிவாஜி சிலை அமைக்கப்பட வேண்டும்.

அதேபோல் திருச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சிவாஜி சிலை மூடி இருக்கிறது வருகின்ற அவர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் சிவாஜி சிலை திறக்கப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.