• Tue. Mar 25th, 2025

கோவையில் லாக் டவுன் மாவட்ட நிர்வாகம் உத்தரவு!…

By

Aug 7, 2021

கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்திலிருந்து மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கோவை கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு ,போன்ற பகுதிகளில் ஜவுளி நிறுவனங்கள் நகைக் கடைகள் புத்தகக் கடைகள் செல்போன் கடைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பகுதியில் பொருட்கள் எடுப்பதற்காக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் அதிக அளவில் வருவார்கள். இதனால் இந்த பகுதி எப்போதுமே மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துக் காணப்படும்.

குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். தற்போது தொற்று அதிகரித்து வருவதால். அதனை கட்டுப்படுத்தும் விதமாக

மக்கள் அதிகம் கூடும் இடங்களான கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம், 5,6,7 வீதிகள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ராயல் நகர் சந்திப்பு, ரைஸ் மில் சாலை, என்.பி, இட்டேரி சாலை, எல்லை தோட்டம் சந்திப்பு, துடியலூர் சந்திப்பு, உள்ளிட்ட 12 தெருக்களில் உள்ள அத்தியாவசிய கடையான பால் மருந்தகம் காய்கறி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப் படுகிறது.

கோவையில் அதிக அளவில் கூட்டம் கூட கூடிய 9 டாஸ்மார்க் கடைகளும் நாளை மூடப்படுகிறது. விதிமுறைகளை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப் படுகிறதா? என்பதை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவினாசி சாலையில் உள்ள வ. உ. சி. பூங்கா, காந்தி பார்க், பாரதி பூங்கா, உள்ளிட்ட அனைத்து பூங்காங்களும் மூடப்பட்டு மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பூங்காக்களுக்கு செல்லக்கூடியவர்களை தடுக்க சாலை தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகள் மதித்து நடக்க வேண்டும். என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.