கேரளா மாநிலம் பாலக்காடு வழியாக தமிழகத்திற்கு லாரி மூலம் சந்தனக் கட்டையை மறைத்து கடத்துவதாக வனத்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை பாலக்காடு மற்றும் நெம்மாரா வனத்துறையினர் சோதனை செய்த போது லாரியில் ரகசிய அறை அமைத்து 57 சாக்குகளில் 1100 கிலோ சந்தனக்கட்டைகளை மறைத்து கடத்த முயன்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் கொண்டோட்டியைச் சேர்ந்த அனஸ் ஆகியோரை ஒலவாக்கோடு வனத்துறையினர் கைது செய்தனர்.
1,100 கிலோ சந்தன கட்டையையும் லாரியையும் பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் நடத்திய விசாரனையில் சந்தனக்கட்டையை மலப்புரம் மஞ்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.
மேலும் இந்த சந்தனக்கட்டைகள் மஞ்சேரி மூச்சிக்கல்லைச் சேர்ந்த குட்டிமானுக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது என்று வர வேண்டும்.