• Fri. Feb 14th, 2025

குழந்தை பிளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து தெரியாமல் உண்டதால் அதிக பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதி……நலம் விசாரித்தார் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..

Byadmin

Jul 26, 2021

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஐந்து வயது குழந்தை இசக்கியம்மாள் பிளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து தெரியாமல் உண்டதால் உடல் மெலிந்து அதிக பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து இன்று காலை நேரில் சென்று குழந்தையின் நலம் விசாரித்தார் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அவர்கள்; அக்குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் அங்கேயே வீதியில் தங்குவதை அறிந்த அடுத்த நொடி சட்டமன்ற விடுதியில் தமக்கு ஒதுக்கிய அந்த அறையை அவர்கள் தங்குவதற்கு தந்து தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கியதை அந்த பெற்றோர்கள் மனம் உருக ” நாங்கள் கடவுளை கண்டதில்லை இவரைக் காண்கிறோம் ” என்று மனம் நெகிழ்ந்தனர்…