தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அமெரிக்கா முதல் இந்தியா வரை பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது தூதரகங்களை மூடியுள்ளன. தூதரக அதிகாரிகள், தொழில் விஷயமாக ஆப்கானிஸ்தான் சென்றவர்கள் என தங்களது நாட்டின் விஜபிக்களை விமான அனுப்பி சொந்த நாட்டிற்கு அழைத்து வருகின்றனர். இந்தியா கூட ஆப்கானில் தூதரகத்தை மூடியதை அடுத்து அங்கிருந்த தூதரக அதிகாரிகள் 120 பேருடன் 2வது விமானம் மூலமாக இன்று இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆனால் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 தொழிலாளர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காபூலில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் வேலைக்கு சேர்ந்த போதே வாங்கிக்கொண்டதாக தெரிகிறது. இதனால் இவர்கள் இந்தியா திரும்புவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
எனவே இந்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அப்பாவி தொழிலாளர்களை மீட்க நடவடிகை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துவருகிறது.