விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் ” மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும் ” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
கோரிக்கை விடுத்துள்ளது. .
தமிழ்நாட்டில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஆனால் மொழியியலுக்கென தனியே பல்கலைக்கழகம் ஏதும் இல்லை.
உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும் இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும் உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவான வகையில் தமிழ்நாட்டில் பொருத்தமானதொரு இடத்தில்இ கலைஞரின் பெயரில் அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.
ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்திருக்கும்
‘ மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கலாம்.
கலைஞர் மூன்றாவது நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிக்க கட்சியின் நிறுவனத்தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.