


அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்க அதிமுகவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த முனுசாமி என்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2008 முதல் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியில் இருப்பதாகவும் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சங்கத்தில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் உறுப்பினராக தமிழகம் முழுவதும் இருப்பதாகவும், தொழிற்சங்க பேரவைகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும் என கடந்த 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த தேர்தல் மாநிலம் முழுவதும் 14 ஆகஸ்ட் முதல் 17ம் தேதி செப்டம்பர் வரை 5 கட்டங்களில் நடத்தபடவுள்ளது. நிர்வாகிகள் தேர்தலுக்காக நாளிதழில் கடந்த 6 ஆகஸ்ட் தேதி அறிவிப்போடு வெளியிடப்பட்டதாகும், தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போன்று தேர்தல் காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரை 5 மணி நேரம் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. சென்னையில் வேளச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
சென்னையில் உள்ள சங்க உறுப்பினர்கள் சுமார் எட்டாயிரம் பேர் வரையிலான ஒரே இடத்தில் வாக்களிப்பதற்கு உள்ளதாகவும் 5 மணி நேரத்தில் இவ்வளவு உறுப்பினர்கள் ஓரே இடத்தில் வாக்களிப்பது என்பது இயலாத ஒன்று என்று அவர் தெரிவித்தார். தற்போதைய கொரானா பரவல் தடுப்பதற்காக மாநில அரசு பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதித்து உத்தரவிடுள்ளது.
இந்தநிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தேவையற்ற கொரானா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது பொதுமக்களுக்கு பாதிப்பு எற்படும் தேர்தல் விதிகளுக்கு புறம்பாகவும் கொரோன பரவல் நேரத்தில் நடைபெறவுள்ள தேர்தலை ரத்து செய்ய வேண்டும் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணா பேரவை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

