இன்று காலை 6 மணி முதலே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் எம்ஆர்சி நகர் பகுதியில் உள்ள வேலுமணியின் உறவினர் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான ஒரு இடத்திலும், கோவையில் 35 இடங்களிலும், காஞ்சிபுரத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, மற்றும் சென்னை, வேளச்சேரி, தேனாம்பேட்டி, சீத்தாம்மாள் காலனி, உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுக்கரையில் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. சி.ஆர். கன்ஸ்ட்ரக்சன் ராஜன், எஸ்.பி. பில்டர்ஸ் முருகேசன், சேசு ராபர்ட் ராஜா, கே.சி.பி. என்ஜினியரிங். சந்திரபிரகாஷ், சந்திரசேகரன், செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன் உள்ளிட்ட பலர் வீடு மற்றும் நிறுவனங்களில் சோதனை நடைபெறுகிறது