தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அடிப்படை வசதிகள் இல்லாத மலை கிராமத்தில் மரத்தில் கொடி கம்பம் அமைத்து இருளர் இனமக்கள் மக்கள் மரியாதை செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பென்னாகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பண்ணப்பட்டி எனும் மலை கிராமம். அங்கு இருளர் இனத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மின்சாரம், சாலை போக்குவரத்து போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத மலை கிராமத்தில் வசிக்கும் சிறுவர்கள் சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என தங்கள் பெற்றோர்களிடம் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
சாலை வசதி இல்லாததால் கம்பம் நடுவது சிரமான காரியம் எனவே, காட்டுக்குள் இருந்து ஒரு மரத்தை வெட்டி அதையே கம்பமாக பயன்படுத்தி கொடியேற்ற முடிவு செய்தனர். இதை அடுத்து திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னப்பட்டி சென்று தேசிய கொடியை ஏற்றி அங்கு உள்ள கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் ,சிறுவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டுகளையும் வழங்கினார். அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும், நாட்டுப்பற்றை பறைசாற்றும் விதமாக கிராம மக்கள் செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.