


இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித் திருவிழாக்கான கொடி ஏற்றும் நிகழ்ச்சி பெரும் விமர்சியாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடி மாதம் நடக்கக்கூடிய ஆடித் திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரினால் (கம்பத்தடிக்கு) அபிஷேகங்கள் நடத்தப்பட்டு , மங்கள வாத்தியங்கள் ஒலிக்க கோவில்களில் உள்ள அதிகாரிகள் முன்னிலையில் இராமநாதசுவாமி கம்பத்தடி மண்டபத்தில் ஸ்தானிக பட்டர்கள் கொடி ஏற்றினார் .

