

தமிழ்நாடு அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார்
.ஆர்ப்பாட்டத்தில் அகவிலைப்படி ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும், குடும்ப நல பாதுகாப்பு நிதி உயர்த்தி வழங்க வேண்டும், 70 வயது முதல் 20% ஓய்வூதியத்தினை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

