
தமிழகத்தில் செயல்பட்டில் மூன்றாம் இடம் பிடித்த கோட்டையூர் பேரூராட்சி வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று விருது பெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது கோட்டையூர் பேரூராட்சி. இந்தப் பேரூராட்சி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த பேரூராட்சியில் கோட்டையூர், கோ. வேலங்குடி, கல்லக்குடி என மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியது. இப்பேரூராட்சியில் 14266 வாக்காளர்கள் உள்ளனர். 15-வார்டுகளும், 136 தெருக்களும் கொண்டது இந்த கோட்டையூர் பேரூராட்சி.
இந்த பேரூராட்சியில் சாலை வசதி குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி சுகாதாரம் பொது மக்களிடையே இருந்து குப்பைகளை வாங்கி அதை பிரித்து எடுத்து இயற்கை உரம் தயாரிப்பது கொரானா வைரஸ் பரவும் காலத்தில் செயல் அலுவலர் கவிதா தலமையிலான பேருராட்சி பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரிடம், கோட்டையூர் பேரூராட்சி சிறந்த செயல்பாட்டிற்காக முன்றாம் இடத்திற்க்கான விருதினை பெறவுள்ளது
