முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அனுமார் வால் போல நிறைவடையாமல் நீண்டு கொண்டே போகிறது.
இன்று வரை நீதி இறுதிப்படுத்தப்படாமல் மேலும் மாத காலத்திற்கு அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 11வது முறையாக இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சில கேள்விகளுக்கு விடை கிடைக்கும் சில கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்பார்கள். அது போல தான் ஆறுமுக சாமி ஆணையமும் என்பது போல ஆகிவிட்டது. ஜெயலலிதா இறந்து 5 ஆண்டுகளாகிறது. அவரது மரணம் குறித்த சந்தேகம் அவரது மறைவுக்கு காரணம் யார்?
அந்த மரணத்திற்கு உரிய நீதி கிடைக்குமா என்று கட்சி வித்தியாசமின்றி ஒவ்வொருவரும் ஏங்குகிற ஒரு கேள்வியாக உறுத்திக்கொண்டிருக்கிறது. அப்போது ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி அறிவித்தார். ஜெயலலிதா இறந்து 7 மாதங்கள் கழித்து இந்த அறிவிப்பு வெளியானது. அது வரை ஒவ்வொருவர் மனதிலும் கனன்று கொண்டிருந்த நெருப்புக்கு ஆறுதலாக இந்த செய்தி அமைந்தது.
ஜெயலலிதாவின் உறவினர்கள் உதவியாளர்கள் சசிகலாவின் உறவினர்கள் சிகிச்சை அளித்த டாக்டர்கள் அதிமுக கட்சி பிரமுகர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை வலையத்துக்குள் அனைவரையும் கொண்ட வந்து விசாரித்தனர். விசாரணை நீதிபதி. 3 மாதத்திற்குள் விசாரணை முடியும் என்ற நிலை மாறி 6 மாதத்திற்கு விசாரணை செய்ய அவகாசம் அமைச்சர்கள் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் விசாரணைக்கு ஆஜராகமல் கடைசி வரை டிமிக்கி கொடுத்து வருகிறார்கள். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணையை விரைந்து முடிப்பதற்கு பதிலாக ஆட்சியை காப்பாற்றுவதிலேயே அதிமுக அமைச்சர்களும் கட்சியின் தலைவர்களும் செயலாற்றினர்.
அது மட்டுமல்ல அம்மா இட்லி சாப்பிட்டார் தோசை சாப்பிட்டார் என்று அமைச்சர் சீனிவாசன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி அளந்துவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டார்கள்.
அம்மாவின் ஆட்சி என்று கூறியே 5 ஆண்டுகளை நகர்த்தினார்களே ஒழிய அம்மா மரணம் சும்மா கிடப்பில் போடப்பட்டது. சட்டமன்ற தேர்தலும் வந்தது. தேர்தலில் ஜெயலலிதா மரணம் புயலைக்கிளப்பி எதிர்கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற நிலையில் பிரச்சாரம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக பிரச்சாரங்களில் ஜெயலலிதா மரணம் குறித்து அரசியல் தலைவர்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் ஜெயலலிதா மரணம் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசி வந்த நிலையில் மறைந்த தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிப்பதாக இருவரும் பேசுவதற்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனுக்கொடுத்தது.
ஆனால் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தார். அம்மா என்பதையும் விசாரணை என்பதையும் அதிமுக ஆட்சியாளர்கள் அர்த்தமற்றதாக்கியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதி குறித்து விசாரித்து மர்மக்குற்றவாளிகள் முகத்திரையை கிழித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார் ஸ்டாலின். அதனாலோ என்னவோ மக்கள் திமுகவை ஆட்சி மக்கள் இந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார்கள்.
இந்த ஆமை எப்போது எல்லைக்கோட்டைத் தொடும் என்ற ஆவலை போல அம்மாவின் மரணம் குறித்த விசாரணை கமிசன் எப்போது அறிக்கை தரும் என்ற ஆவல் உள்ளது. முயல் ஆமைக்கதையில் கடைசியில் ஆமை எல்லைக் கோட்டை தொட்டது. அது போல ஆறுமுக சாமி விசாரணைக் கமிசன் நிறைவடையும் என்பதில் ஐயமில்லை நிச்சயம் அம்மாவின் மரணத்திற்கு திமுக ஆட்சியில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு மட்டுமல்ல அதிமுக தொண்டர்களுக்கும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.