• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மின் வினியோக குறைகளைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்.

Byadmin

Jul 15, 2021

மின் வினியோக குறைகளைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்.

கோவை. ஜூலை. 15-

கோவை மாநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குப்பு ராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோவை மாநகர் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கவும், மின் விபத்தை தடுக்கும் வகையிலும் 24 மணி நேரமும் இயங்கும் மின் தடை புகார் மையம் மற்றும் மின் நகரம் எனும் நுகர்வோர் மையம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது 10 இலக்க மின்இணைப்பு எண்ணை குறிப்பிட்டு தங்கள் பகுதியில் ஏற்படும் மின் தடை மின் கட்டணத்தில் குறைபாடு குறைந்த மற்றும் உயர் மின் அழுத்தம் போன்ற புகார்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 94 987 94 987 என்ற மின் நுகர்வோர் சேவை மைய எண்ணில் தெரிவிக்கலாம். இதுதவிர 94 42 11 19 12 என்ற வாட்ஸ்அப் என்னிலும் எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்படி மழை காற்று காலங்களில் தரையில் விழுந்து கிடக்கும் மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உடைந்த மின்கம்பிகள் பழுதடைந்த மின் சாதனங்களை தன்னிச்சையாக பொதுமக்கள் தொடக் கூடாது. அதற்கு பதில் மேற்கண்ட இலவச தொலைபேசி எண்கள் தெரியப்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.