• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஜைனோ பிளிக்ஸ் புதிய செயலி – கோவையை சேர்ந்த இளைஞர் செயலியை உருவாக்கி அசத்தல்…

BySeenu

Jan 2, 2024

யூடியூப், பேஸ்ஃபுக், இண்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என பல்வேறு செயலிகளின் வாயிலாக வீடியோவை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்வது உலக அளவில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இதே போல வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதில் கணிசமான வருவானத்தை ஈட்டும் வகையில், கோவையை சேர்ந்த உதயபிரகாஷ் எனும்இளைஞர் (ZYNO FLIX) ஜைனோ பிளிக்ஸ் எனும் செயலியை உருவாக்கியுள்ளார்.

புதிய செயலியை அறிமுகம் செய்த இளைஞர் உதய் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த ஒரு வருடமாக புதிய செயலியின் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டதாகவும், தற்போது செயலியின் இறுதி வடிவத்தை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளதாக கூறினார். இதன் வாயிலாக தங்களுக்கு பிடித்த வீடியோக்களை யார் வேண்டுமானலும், இதில் பதிவேற்றம் செய்வதோடு, அந்த வீடியோக்களை விற்கவும், வாங்கவும் வசதியாக உருவாக்கி உள்ளதாக கூறிய அவர், இதனால் இதில் கணிசமான வருமானத்தை தினமும் பெறும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பாக, கல்வி, மருத்துவம் மற்றும் அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் குறும்படங்கள் என கல்வி, மருத்துவம், சமையல் குறிப்புகள் குறும்படங்கள் என அனைத்து தகவல் சார்ந்த வீடியோக்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்வதால் உலகின் எந்த பகுதியில் இருப்பவர்களும், இந்த வீடியோவை வாங்க முன் வருவதால் கணிசமான வருமானமும் இதில் கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

இணையத்தில் வீடியோக்களை எளிதாக வாங்க, விற்க கோவையை சேர்ந்த இளைஞர் உருவாக்கிய இந்த புதிய செயலி அனைவரின் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடதக்கது.