துபாயில் இறந்து போன வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் என்று அவரது பெற்றோர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், அஞ்சலம் தம்பதியினரின் மூத்த மகன் மணி(26) இவர் கடந்த எட்டு வருடங்களாக துபாயில் தனியார் கம்பெனியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்து விட்டு கடந்த 09-02-2025 அன்று மீண்டும் துபாய் சென்றார்.
இந்த நிலையில் 12-02-2025 அன்று வேலை பார்க்கும் கம்பெனியில் மின்சாரம் தாக்கி மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 26-02-2025 அன்று மணி இறந்துவிட்டதாக ஃபோன் மூலம் தகவலை மட்டும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மணி இறந்து பத்து நாட்களாகியும் அவரது உடல் சொந்த ஊருக்கு வரவில்லை எனவும்,. இறந்த தனது மகன் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என அவர் தாய் மற்றும் உறவினர்கள் கதறி கழுதனர். அத்துடன் வெளிநாட்டில் உள்ள தனது மகன் மணி உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவிட வேண்டும் என்று மணியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.














; ?>)
; ?>)
; ?>)