அரியலூர்மாவட்டம் , திருமானூர் நடு இராஜவீதிலுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அலுவலக கூட்டரங்கில்,அரியலூர்சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ.சங்கர்அறிவுரையின்படிநடைபெற்ற கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு இயக்கத்தை தீவிரபடுத்துதல்,வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை votechoriroko.in இணையத்தில் பதிவு செய்தல்,Applicatiom Form-6,7,8,8A கையா ளுதல்,வாக்காளர் முகாம் நடைபெறும் போது, முகாமில் அதிக அளவில் இளைஞர் காங்கிரஸார் கலந்து கொண்டு பணி செய்தல்,அதிக அளவில் இளைஞர்களை , இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர் சேர்க்கை செய்தல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருமானூர் நகர தலைவர்டி.வினோத் குமார் கலந்து கொண்டார்.அரியலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்திமரிய ஜான் பிரிட்டோ கூட்டத்திற்கு தலைமை .தாங்கினார். இளைஞர்காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி,சிறுபான்மைதுறை மாவட்ட தலைவர் நிக்கோலஸ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட , வட்டார , நகர இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்ட முடிவில் ,திருமானூர் வட்டார இளைஞர் காங்கிரஸ்தலைவர் டி பாரதி நன்றி கூறினார்.