• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அணைக்கட்டு அருகே கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

Byமதன்

Jan 5, 2022

அணைக்கட்டு அருகே கடிதம் எழுதி வைத்து கருங்கல்லை கயிற்றால் காலில் கட்டிகொண்டு கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைப்பு .கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரனை.

அணைக்கட்டு தாலுக ஒடுகத்தூர் அடுத்த பாலப்பாடி கிராமத்தில் பி. இ., பட்டதாரியான யுவராஜ் (வயது 30) தந்தை முருகேசன் , தனியார் கம்பெனியில் பணி செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி அவருக்கு சுஜாதா என்ற மனைவியும் உள்ளார். கடந்த சில காலங்களாக தீராத மன அழுத்தத்தில் காணபட்டதாக தெரிகிறது.

திருமணம் முடிந்து ஒரு ஆண்டே ஆன நிலையில் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்து குருவராஜபாளையம் பகுதியில் சிவராம ராஜா என்பவரின் நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவர் தன் கைப்பட எழதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது என் இந்த முடிவுக்கு என் அதிக மன அழுத்தம் தான் காரணம் வேறு ஏதும் இல்லை என் குடும்பத்தாரை அலைக்கழிக்க வேண்டாமென எழுதிவைத்துள்ளார் .

மேலும் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு வேப்பங்குப்பம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனைத் தொடர்ந்து கொலையா? தற்கொலை? என விசாரணை செய்து வருகின்றனர்.