கோவையில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் போதை பொருள்கள் விற்பனை செய்வது தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போத்தனூர் போலீசார் அங்கு உள்ள 4 ம் நம்பர் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டு இருந்தார். உடனே காவல் துறை அந்த நம்பரை பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர் வைத்து இருந்த பையை திறந்து சோதனை செய்தனர். அப்பொழுது அதற்குள் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தன உடனே அந்த நபரை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் சேர்ந்த அபுதாஹிர் என்பதும், அவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.இது குறித்து காவல் துறையினர் கூறும் போது அபுதாஹீர் பெங்களூரில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்து உள்ளார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு 9 லட்சத்துக்கு மேல் இருக்கும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.