ரீல்ஸ் மோகத்தில் ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று நடனமாடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண்ணின் வீடியோ வைரலானது.

மேலும் பேராபத்தை உணராமல் ரீல்ஸ் மோகத்தில் ஈடுபட்ட பெண் மீது ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதள வாசிகள் கருத்து-ரீல்ஸ் மோகத்தை ஊக்குவிக்கும் செயலாக இந்த பெண்ணின் வீடியோ அமைந்துள்ளதால் உடனடியாக பதிவை அகற்றவும் சமூக வலைதளம் மூலமாக கருத்து தெரிவிக்கின்றனர்.