• Fri. Apr 26th, 2024

கவசங்களுடன் குரங்கு அம்மையை தடுக்கலாம்…

Byகாயத்ரி

Jun 6, 2022

உலகம் முழுவதும் 26 நாடுகளில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் 2 முதல் 4 வாரங்களுக்கு காய்ச்சல், உடலில் அம்மை தடுப்புகள், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். இதையடுத்து தமிழக பொது சுகாதாரத்துறை இந்த நோயை வரும் முன் தடுப்பதற்கு பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாதிப்பிலிருந்து குணமடையும் வரை அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அதனைப் போலவே நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மட்டுமல்லாமல் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பவேண்டும். மேலும் குரங்கு அம்மை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு கவச உடைகளை சுகாதாரத் துறையினர் அணிய வேண்டும்.உமிழ்நீர் மற்றும் சளி போன்றவற்றின் மூலமாக அந்த நோய் பரவும் என்பதால் முகக்கவசம் அணிவதன் மூலம் கட்டாயம் இந்த நோய் பரவலை தடுக்கலாம். இந்த நோய் பரவல் குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதலை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *