• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மே 10ஆம் தேதிக்குள் எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

Byவிஷா

Apr 28, 2023

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்பாட்டை அங்கீகரிக்கவும் ஊக்கப்படுத்துவதற்கும் மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகின்றது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளதால் இந்த விருதுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய 044-22501011/12/13/14 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை www.dcmsme.gov.in என்ற இணைய முகவரியில் அல்லது http://dashboard.msme.gov.in/na என்ற இணைய முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.