• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

யோகிபாபுவின் புதிய முடிவு திரையுலகம் வியப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் யோகி பாபு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தான் முன்னணி காமெடியன் ஆனபிறகு சசி என்பவரை கால்ஷீட்டை கவனித்துக்கொள்ளும் மேனேஜராக நியமித்திருந்தார் யோகிபாபு.

ஆனால் தற்போது யோகிபாபுவின் மேனேஜர் சசி அந்தப் பணியிலிருந்து விலகிக் கொண்டு உள்ளார்.இதையடுத்து யோகி பாபு வெளியிட்டுள்ள செய்தியில், இனிமேல் எனக்கு மேனேஜர் என்று தனிப்பட்ட முறையில் யாரும் கிடையாது.

என்னுடைய கால்சீட்டுகளை நானே கவனித்துக் கொள்ளப் போகிறேன். அதனால் படம் சம்பந்தமாக அனைவரும் என்னை நேரடியாகவே அணுகலாம் என்று தெரிவித்துள்ளார். இது தமிழ் சினிமா வட்டாரத்தின் வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.