உலக போதை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் சிறுதூர் பகுதியில் உள்ள ஸ்ரீகோபாலகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தலைவர் அருண்போத்திராஜா, செயலர் இந்திராணி ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பள்ளியில் இருந்து துவங்கிய இப்பேரணியில் மாணவ மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோர் போதையினால் ஏற்படும் தீமைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் தலைமையாசிரியை மேரிநிர்மலா, ஜேஆர்சி ஒருங்கிணைப்பாளர் பழனி வேலு, உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன் திருப்பாலை காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா உதவி ஆய்வாளர் ராமசாமி, தலைமை காவலர்கள் பானுபீ, பைரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
