உலகப்போதை விழிப்புணர்வு தினமான ஜுன் 26_ம் நாளில் கடந்த 10 ஆண்டுகளாக. குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர்
அருட்பணி நெல்சன் நடத்தி வரும் போதைக்கு எதிரான இயக்கம் சார்பில் மற்றும் குமரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகும் இணைந்து நடத்திய உலகப்போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி,குமரி மாவட்டத்தில் 31_ இடங்களில் இருந்து ஜோதி ஓட்டமாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலின் நிறைவடைகிறது.

கன்னியாகுமரியில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் நினைவு மண்டபம் முன்பிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை வாழ்த்திப் பேசி டார்ச்சில் ஒளி ஏற்றி, பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்.

இந்த நிகழ்வில் தன்னார்வ அமைப்பை சேர்ந்த சிரில், கன்னியாகுமரி
நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், எஸ்.ஏ.ராஜா குழுமத்தை சேர்ந்த ஜாய்ராஜா மற்றும் தன்னார்வ குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

குமரியில் மழை பரவலாக பெய்த நிலையிலும், மாணவர்கள் உற்சாகமாக 22 கிலோமீட்டர் தூரம் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்றார்கள்.