• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வடபழனி முருகன் கோவிலில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை

Byவிஷா

Sep 12, 2025

சென்னை வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் தற்காலிக அடிப்படையில் தமிழ் ஆசிரியர், இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:

1) தேவார ஆசிரியர் – 1

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

கல்வித் தகுதி: சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய எந்தவொரு நிறுவனங்களிலும் நடத்தப்படும் மூன்றாண்டு “பன்னிரு திருமுறை” பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப் பாடசாலைகள் வழங்கும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2) இசை ஆசிரியர் – 1

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

கல்வித் தகுதி: குரலிசையில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

3) தமிழ் ஆசிரியர் – 1

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

கல்வித் தகுதி: தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலைக் கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) பெற்றிருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? ஆன்லைன் மூலமாக www.hrce.tn.gov.in, www.vadapalaniandavar.hrce.tn.gov.in விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 30.09.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தை வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழனி, சென்னை – 600 026 (Deputy Commissioner / Executive Officer).