குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.


மகளிர் அணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல் வரவேற்று பேசினார். நாகர்கோவிலில் மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்டம் மகளிர் அணி தலைவர் ஜெசிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி ஆகியோர் சிறப்புறை ஆற்றினார்கள்.
மேயர் மகேஷ் பேசும் போது கழகத்தில் உண்மையாக உழைப்பவர்கள் உயர் பதவிகளுக்கு வர முடியும். உங்களின் கண்களுக்கு நானே சாட்சி.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னுடைய, உண்மையான, அனைவரையும் ஒருங்கிணைத்து கடந்த எனது 26_ ஆண்டுகளின் உழைப்பின் உயர்வே.
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் என்ற பதவிகளுக்கு வந்ததற்கான உழைப்பின் சான்று.
மக்களவை உறுப்பினர் அக்கா கனிமொழியின் பிறந்த நாள் எதிர் வரும் ஜனவரி 05_ ம்தேதி கொண்டாடப்படுகிறது.
அக்கா கனிமொழிக்கு வாழ்த்துகள் தெரிவிக்க. குமரி மாவட்டத்தில் இருந்து
மகளிர் மற்றும் தொண்டரணியை சேர்ந்த 150 பெண்களாவது சென்னைக்கு செல்லவேண்டும்.

சிறப்பு வாக்காளர்கள் திருத்த பணியில் தமிழகத்திலே ‘குமரி மாவட்டம்’ முதலிடம்
பிடித்துள்ளது. தமிழகம் பீகார் அல்ல என்பதை பாஜகவினருக்கு நம்முடைய இந்த செயல் மூலம் நிரூபுணம் ஆகியுள்ளது.
நம்முடைய மண்ணைச் சேர்ந்தவர். குமரி மாவட்டம் கேரளாவின் பகுதியாக இருந்த போதே சட்டமன்ற உறுப்பினராக இருந்த. குமரியின் கோமேதகம் என தலைவர் கலைஞரால் பாராட்டப்பட். தமிழக சட்டமன்ற எதிர் கட்சி தலைவராக இருந்த ஐயா பொன்னப்பநாடரது சிலை நாகர்கோவில் உள்ள பூங்காவில் அமைக்கப்படுகிறது.

ஐயா பொன்னப்பநாடார் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தபின். புத்தளத்தில் எனது சொந்த செலவில் வைக்கும் தலைவர் கலைஞர் சிலை மற்றும். முதல்_அமைச்சர் பெயர் சூட்டப்பட்ட அறிவியல் பூங்காவை திறந்து வைக்கவுள்ளார். தேதி இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் எனவும்
மேயர் மகேஷ் அவரது பேச்சில் வெளிப்படுத்தினார்.




