சித்ரா பௌர்ணமி முன்னிட்டு, கோவிலம்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தனர்.
சென்னை கோவிலம்பாக்கத்தில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு கோவிலம்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி கோவிலம்பாக்கத்தில் உள்ள மிகப் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் இருந்து, பெரிய கோவிலம்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாங்காளி அம்மன் கோவிலில் வந்தடைந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாக சார்பாக அனைவருக்கும் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இந்த சிறப்பு பால் குடம் நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வெகு சிறப்பாக இந்த பால்குடம் நிகழ்ச்சியை ஊர் பொதுமக்கள் அனைவரும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியை கோயில் நிர்வாகம் வெகு சிறப்பாக செய்து, இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.