தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரிக்காவு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் கும்பகோணம் மாவட்டம் கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சிவமணி இவர் செல்போனில் வீடியோக்கள் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிட்டு வந்தார்.

இதனால் அவரது மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சிவமணியை சில நாட்களாக சில நாட்களுக்கு வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றால் மன மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. என மருத்துவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து நடராஜன் தனது மனைவி சிவமணியை கோவை கவுண்டம்பாளையம் கவுசிங் யூனிட்டில் வசித்து வரும் மகள் வீட்டுக்கு அழைத்து வந்தார். மேலும் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சிவமணியை சிகிச்சை பெற்றார். இதற்கு இடையே அவர் பயன்படுத்தி வந்த செல்போன் தொலைந்து விட்டது.
இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவருக்கு சிறிய செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்து உள்ளனர். அது சிவமணிக்கு பிடிக்கவில்லை, இந்நிலையில் சிவமணி ஹவுசிங் யூனிடில் 14வது மாடியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்கச் சென்றார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் 14 வது மாடியில் இருந்து தவறி கீழே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மீது விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த வரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








