• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு..,

BySeenu

Jun 26, 2025

கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் அவரது மனைவி வனஜா. இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கோவை பீளமேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதாக கூறப்படுகிறது.

அதில் நிலை தடுமாறிய கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி வனஜாமணி வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். அப்பொழுது முன் சக்கரத்தில் வனஜாமணி சிக்கிக் கொண்டார். பேருந்தின் முன் சக்கர சக்கரம் வனஜாமணியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன்னே உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள், பீளமேடு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அரசு பேருந்து இவர்கள் மீது மோதியதா ? அல்லது இவர்களின் இருசக்கர வாகனம் திரும்பும் போது மோதி ஏற்பட்ட விபத்தா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பேருந்து மோதி தலையணை தலை நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.