கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த சோமனூரைச் சேர்ந்தவர் கலாமணி. இவருடைய கணவர் இறந்து விட்டதால் தனது இரண்டாவது மகள் சத்திய பிரியாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் முதல் மாடியில் சுதா என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது கணவர் குழந்தைகளுடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அவர் நேற்று மாலை 8 மணி அளவில் தனது வீட்டில் கேஸ் கசிவது போல் உள்ளது. அதை வந்து பார்க்குமாறு கலாமணியை அழைத்து உள்ளார். அதை நம்பி அவர் மேலே சென்றார். அப்பொழுது சுதா திடீரென கலாமணியை வாயை பொத்தி, கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் கலாமணி தங்கச் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதா சமையல் அறையில் இருந்த அரிவாள் மனையை எடுத்து கலாமணியை தலையை ஓங்கி வெட்டி உள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் கலாமணி கூச்சல் போட்டார். அந்த சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருந்த மருமகன் ராமலிங்கம் மேலே சென்று பார்த்தார். அங்கு தலையில் ரத்த காயத்துடன் கலாமணி இருந்து உள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமலிங்கம் சுதாவை ஒரு அறைக்குள் தள்ளி கதவை பூட்டினார். அவர் கலாமணியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாவை கைது செய்தனர். விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயன்றதாக தெரியவந்தது. உடனே காவல் துறையினர் சுதாவை கைது செய்தனர்.













; ?>)
; ?>)
; ?>)