கன்னியாகுமரி நகராட்சி பகுதியில் ராபா உலக சாதனை புத்தகம் மற்றும் விங்ஸ் மழலையர் பள்ளி இணைந்து ஒருங்கிணைத்த சிறுவர் சிறுமியரின் உலக சாதனை திருவிழா 2025 நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மரியஜெனிபர்.
3 முதல் 5 வயது வரையான பிள்ளைகள் இணைந்து “பெண் எனும் பேராற்றல்” என்ற தலைப்பில் பெண் ஆளுமைகளை ஓவியங்களாக தீட்டியும் குழந்தைகள் இணைந்து திருக்குறள்களை ஒப்புவித்தும் தங்கள் தனித்திறமைகளிலும், குழு செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதை மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் கண்டுகளித்த பெற்றோர்கள்.

குமரி மாவட்டத்தின் பிள்ளைகள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி ஒரு சாதனை நிகழ்வை முன்னெடுத்திருப்பது மிகவும் பெருமையான உணர்வை பார்வையாளர்களுக்கு கொடுத்தது.
சிறுவயதிலே சாதனையாளர்கள் என்ற பெருமையை பெறுவது இக்குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் தன்னம்பிக்கையை ஊட்டும் அழியாத நினைவாக இருக்கும். மேலும் குழந்தைகள் குழுவாக இணைந்து முன்னெடுக்கும் இத்தகைய செயல்பாடுகள் அவர்களை உளவியலாக பலப்படுத்தவும் சமூகமயமாக்கவும் பெரிதளவில் உதவும்.
இத்தகைய வாய்ப்பை இந்த குழந்தைகளுக்கு பெற்று தந்திருக்கும் விங்ஸ் மழலையர் பள்ளி நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். பிள்ளைகளை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் , பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
எங்களையும் இந்த நிகழ்வுக்கு அழைத்து இச்சாதனை நிகழ்வை துவக்கி வைத்து கண்டுகளிக்க வாய்ப்பளித்த பள்ளி தாளாளர் அருணாச்சலம் மற்றும் முதல்வர் லாரின் மற்றும் நிர்வாகத்தினருக்கும். மரிய ஜெனிபர் தம்பதியர் நன்றி தெரிவித்தனர்.




