• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அனந்தம் குளத்தில் மீண்டும் படகுத் தளம் அமைக்கப்படுமா.?

நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட பகுதி வடக்கு கோணம் இங்குள்ள அனந்தன்குளம் தூர்வாரப்படாமல் நீண்ட காலமாக சேரும் சக்தியும் அதிகமாக காட்சி அளித்தது. படகு தளமாக அமைக்கப்பட்ட குளம் தற்போது பராமரிப்பு இன்றி கிடந்த நிலையை அறிந்த நாகர்கோவில் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆன ரெ.மகேஷ் கடந்த வாரம் குளந்தை ஆய்வு செய்தார். இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் நாகர்கோவில் மாநகராட்சியும் இணைந்து குளத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். நிகழ்வுக்கு நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் தலைமை வைத்தார். சுத்தப்படுத்தப்பட்டதோடு, குளத்தின் இரு கரைகளில் உள்ள பல ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

அதன் பின் குளம் கரைகள் அகலப்படுத்தப்பட்டு பொது மக்களின் நடைபாதைக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், இந்த குளத்தை ஊர் பொதுமக்களே பராமரிக்க வேண்டும் என்றும் ஒரு கேட்டுக் கொண்டார். நிகழ்வில் யெங் இந்தியா சமூக தொண்டு நிறுவனத்தின் சார்பில் குப்பை தொட்டிகளை மேயர் மகேஷ் இடம் வழங்கினார்கள். அவர் அதை வடக்கு கோணம் தேவாலயம் பங்கு தந்தையிடம் வழங்கினார். தொடார்ந்து குளம் சீர்படுத்தும் பணியை மேயர் துவக்கி வைத்தார். நிகழ்வில் நகர் நல அலுவலர் ராம்குமார் துணை மேயர் மேரி பிரின்சி லதா மாமன்ற உறுப்பினர் சிஜி மற்றும் பீட்டர் யெங் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.