மதுரை மாவட்டம் பரவை அருகேயுள்ள ஊர்மெச்சிகுளம் பகுதியில் சுத்தகரிப்பட்ட குடிநீர் மற்றும் புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் பணிகளை தொடங்கிவைத்த பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
மக்களின் ஒரு ஆளாக இருப்பதால் மக்கள் எனக்கு ஓட்டுபோடுகிறார்கள் இல்லையென்றால் மக்கள் போயிட்டு வாங்கனு சொல்லிருவாங்க
நிறைய வளர்ச்சி பணிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொண்டுள்ளேன்
முழுவடிவம் இல்லாத கூட்டணி NDA என திருமாவளவன் பேசியது தொடர்பான கேள்விக்கு

திருமாவளவனை திமுகவினர் புலம்பவைத்துவிட்டார்கள். வடிவம்பெற்று முழுவடிவத்தோடு அழகாக அமைக்கப்பட்டது தேசிய ஜனநாயக கூட்டணி
அங்குதான் வெட்டு, குத்து எல்லாமே, போர்குரல் நடத்துகிட்டிருக்கு, அதில் மெயின்பார்ட் காங்கிரஸ்தான், காங்கிரஸே போர்குரல் எழுப்பியுள்ளனர். அவங்களுக்கு மரியாதை இல்லை, திமுக எப்போதுமே பொதுவாகவே கூட்டணி கட்சியினரை மதிக்கமாட்டார்கள், அதற்கு திருமாவளவனே சான்று, இதன் மூலமாகவாவது எதாவது வடிவம் கொடுப்பாரா என பார்க்கிறார்
வைகோ அதிமுக குறித்து பேசிய கேள்விக்கு?
வைகோ திண்டுக்கல்லில் திமுக மாநாடு நடத்தி யாரை எதிர்த்து கட்சி தொடங்கினார்.திமுக வாரிசு அரசியல் ஊழலை கண்டித்து தகுதியற்ற ஸ்டாலினை அடுத்தவாரிசாக கொண்டுவருவதற்கு என்னை பழிவாங்குகிறார..விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக என்னை காட்டிகொடுத்து பலிவாங்க பார்க்கிறார்கள் என புலம்பினார் முழங்கினார்.
1999ல் எங்களுடன் இருந்தபோது அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது
அண்ணன் வைகோவுக்கு வயசாகிவிட்டது அதனால் மறந்துவிட்டதால் நினைவூட்டுகிறேன். எங்களுடன் இருந்ததால் தான் பம்பரம் சின்னம் கிடைத்தது
வைகோ நம்பகதன்மையற்ற தலைவர் என்பதால் அவரை அவரது தொண்டர்கள் தூக்கி எறிந்தனர்
திண்டுக்கல் மாநாட்டில் கலைஞரை கட்டிபிடித்து அப்பா மகனே என்றவுடன் வைகோவின் வீர சகாப்தம் முடிந்துவிட்டது. வைகோவிடம் தான் அதிக மாவட்ட செயலாளர்கள் இருந்தார்கள்., அதையெல்லாம் மறந்துவிட்டாரே.
இந்த சட்டமன்ற தேர்தலில் 4 கூடுதலாக சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காக வைகோ பேசுகிறார்
எடப்பாடியை கண்ணப்பன் ஒருமையில் பேசுவது குறித்த கேள்விக்கு?
ராஜகண்ணப்பன் ஒரு பச்சோந்தி, ஒரு கட்சியில் நிலையாக இருக்கமாட்டார், தனியாக கட்சி தொடங்கினர். அதிமுகவின் தலைமையை பேசுவது தவறு
ராஜகண்ணப்பன யாருக்கும் தெரியும், அம்மாவால தான் அடையாளப்படுத்தப்பட்டவர், இவர் பழைய படங்களை விநியோகம் செய்தவர் தான் அந்த கண்ணப்பனுக்கு அம்மா தான் பதவி கொடுத்தார்
அம்மாவிற்கு எதிராக கட்சி தொடங்கி இரட்டைஇலையை முடக்க நினைத்தார்; ராஜ கண்ணப்பன் பேச்சையெல்லாம் ஒரு பேச்சாகவே எடுத்துக்கொள்ள கூடாது.
எடப்பாடியாரை முதலமைச்சராக மக்கள் ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் ஆக போகிறார் என்ற எரிச்சலில் கண்ணப்பன் அப்படி பேசுகிறார்
ராஜகண்ணப்பன் பரம்பரை பரம்பரையாக வந்தவர் கிடையாது; உடுப்பி ஹோட்டலில் சேடப்பட்டி முத்தையாவிடம் காலை பிடித்து அழது சீட்டு கேட்டவர்தான் ராஜகண்ணப்பன். காலை புடிக்கரவரெல்லாம் எங்கள பற்றிலாம் சொல்லக்கூடாது.
தொகுதி மாற வாய்ப்பா? என்ற கேள்விக்கு
நான் தொகுதி மாறுகிறேனா மாறவில்லையா? என்பது எங்களது பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும்
பரவை பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட மெம்பர்களை செயல்படுத்தவிடாமல் திமுக அமைச்சர் எவ்வளவு தூரம் இறங்கிவருகிறார்கள், என்னை தோற்கடிக்க வேண்டும் நினைப்பது நான் வாஸ்துவமான ஒன்றை அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன், அதிமுக – திமுக தான் போட்டி.
தொகுதியில் அமைச்சர் இப்போ கவனம் எடுத்து செய்து என்ன பண்ண?
எப்போதுமே திமுக அதிமுகவை வீழ்த்த வேண்டும் என தான் நினைப்பார்கள், என்னை தோற்கடிக்கு கூடுதலாக ஸ்வாகா வீசிவிடுவார்கள்.
நயினார் நாகேந்திரன் திரிஷா குறித்து பேசியது குறித்து கேள்விக்கு?
அவரே அதற்கு முற்றுப்புள்ளிவைத்து விட்டார்
த.வெ.க குறித்த கேள்விக்கு?
அதிமுக – திமுகவுக்கும் தான் போட்டி மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது.
நயினார் நாகேந்திரன் பேச்சு குறித்து கேள்வியால் தொடரும் விவாதம் குறித்த கேள்விக்கு?
திமுகவே பாஞ்சாலி சபதம் போல அம்மாவை இழிவாக பேசியவர்கள், சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவரை சேலையை பிடித்தி அடித்த கூட்டம் திமுக, அம்மாவை கொலை செய்ய பார்த்தவர்கள் திமுக
திமுக எப்போதுமே பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தது கிடையாது, இப்போதும் இல்லை,
உதயநிதியை காட்டிலும் சகோதரி கனிமொழி மூத்தவர், தம்பி உதயநிதியை விட அறிவு, அரசியல் தெரிந்தவர்தானே பின்னர் ஏன் கனிமொழியை முன்னிலைப்படுத்துவது இல்லை
ஆட்சியிலும் பங்கு என விஜய் சொன்னது தான் பேசுபொருளாகியுள்ளதாக கேட்ட கேள்விக்கு?
அவங்களை பற்றி பேச நான் தயாராக இல்லை
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசப்படுவது குறித்த கேள்விக்கு?
எங்கள் கூட்டணியில் அதிமுக அதிபெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி சொல்லிவிட்டார், பாஜகவும் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் சொல்லிவிட்டனர்.,
திமுகவில் தான் குரல் எழுப்புகின்றனர், திருமாவளவன் ட சொல்லுங்க அங்கதான் குழப்பம் அதிமுக கூட்டணியில் குழப்பம் இல்லை என்று
தேமுதிக கூட்டணியில் இணையுமா?
புதிய கட்சிகள் எந்த கட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என பொதுச்செயலாளர் சொல்லியிருக்கிறார்.
இனி என்னிடம் கேள்வி கேட்கும் போது இனி திமுக – அதிமுக பற்றி கேளுங்கள் மற்றபடி எதையாவது கேட்டால் அதை ட்ரெண்டாக்கிவிடுகிறீர்கள்
சசிகலா புதிய கட்சி தொடங்க திட்டமா என்ற கேள்விக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.






