கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான பழங்குடியினர் கிராமங்கள் உள்ளது. அதில் கோவை குற்றாலம் அருகே உள்ள சிங்கம்பதி என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது.

இந்த கிராமம் வனப்பகுதியில் உள்ளதால் வனத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிராமத்திற்கு வெளி ஆட்கள், வெளி நபர்கள் செல்வதற்கு வனத்துறையினரின் உரிய அனுமதி பெற வேண்டும். மேலும் அங்கு உள்ள மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் செல்வதற்காக காலை, மாலை என இரு வேலைகள் மட்டும் அரசு பேருந்து வசதி உள்ளது. இங்கு வனவிலங்குகள் சர்வசாதாரணமாக வந்து செல்வது வழக்கம்,

இந்நிலையில் அப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பழங்குடியினர் மலை கிராம மக்களால் செல்லமாக அழைக்கப்படும் எம்.எல்.ஏ என்ற காட்டு யானை கடந்த இரண்டு தினங்களாக அங்கு முகாமிட்டு இருந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வேலைக்கு அவர்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டு அந்த கிராமத்திலே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே வனத் துறையினர் அந்த எம்எல்ஏ என்ற காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.