• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பேருந்து சக்கரத்தில் சிக்கி மனைவி பலி..,

BySeenu

Dec 27, 2025

கோவையில் நடந்த சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவியின் உயிர் பிரிந்தது. விபத்தின் நெஞ்சை பத, பதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான கோரகாட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் நேற்று மாலை கோவை பாலக்காடு சாலை சுண்ணாம்புகாளவாய் வழியாக குனியமுத்தூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக பயணிகளை ஏற்றி மதுக்கரை நோக்கி அதிவேகமாக சென்ற கோகுலம் என்ற தனியார் பேருந்து, இருசக்கர வாகணத்தின் பக்கவாட்டில் மோதியதில் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயனித்த ராபியத்துள் பஷிரியாவின் தலையில் ஏறியது. இதில் இருசக்கர வாகனத்தை ஒட்டிவந்த கணவர் முகமது ரபீக் கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் படுகாயம் அடைந்த முகமது ரபீக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோவையில் அதிவேகமாக இயங்கும் தனியார் பேருந்துகளால் இதுபோன்ற விபத்துக்கள் அதிக அளவில் அரங்கேரி வருகிறது. இந்த நிலையில் இந்த கோர விபத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதரவைக்கின்றது. மேலும் இந்த விபத்து தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த கந்தேகவுண்டன் சாவடி பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தின் ஓட்டுனர் ஜெயக்குமார் மீது வெரைட்டிஹால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.