• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் … ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு !

ByKalamegam Viswanathan

Dec 16, 2024

முல்லைப் பெரியாறு அணையை தாரவாக்க தயாராகிவிட்டது திமுக அரசு என ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி இந்த மாவட்ட மக்களின் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் ஜீவாதாரமாக இருக்கக்கூடிய அணை தான் இந்த முல்லை பெரியார் அணணயாகும், இந்த அணையின் உரிமையிலே இன்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகிறது

இது முல்லைப் பெரியாறு அணையின் உரிமை காப்பதற்காக, புரட்சித்தலைவி அம்மா தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி 142 அடியாக உடனடியாக உயர்த்த வேண்டும்,பேபி அணையை சீரமைத்து பிறகு 152 உயர்த்திக் கொள்ளலாம் என்கிற வரலாற்று சிறப்புமிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெற்று தந்ததோடு, அணை பாதுகாப்பாகவும், அணை மிகவும் பலமாகவும்,வலிமையாகவும் இருக்கிறது என்பதை புரட்சித்தலைவி அம்மா விவசாயிகளுக்காக பெற்றுக் கொடுத்ததற்காக ஒட்டுமொத்த விவசாய பெருங்குடி மக்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து மாபெரும் நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்தினார்கள்.

புரட்சித்தலைவி அம்மா பெற்று தந்த உரிமையை நிலைநாட்ட முடியாமல் இன்றைக்கு வாய் மூடி மவுனியாக இருக்கிறது திமுக அரசு, இதை கண்டித்து எடப்பாடியார் சட்டமன்றத்தில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனையை, தென் மாவட்ட மக்களுடைய ஜீவாதாரமாகவும், வாழ்வாதாரமாகவும் இருக்கக்கூடிய இந்த பிரச்சனை குறித்து வைக்கம் சொல்லும் முதலமைச்சர், கேரளா முதலமைச்சரிடம் இது குறித்து பேசி தீர்வு காண்பாரா? தளவாடங்கள் கொண்டு செல்ல தடுத்து நிறுத்தப்பட்டது இதற்கெல்லாம் தீர்வு காண்பாரா? என்று கேள்வி எழுப்பினார்

முல்லைப் பெரியார் அணையை 152 அடியை உயர்த்த அம்மா பெற்று தந்த அந்த தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத இந்த அரசு மெத்தன போக்கு என்று சொல்வதா? அலட்சியப்போக்கு என்று சொல்வதா? அக்கறையின்மை என்று சொல்வதா? அல்லது கூட்டணி தர்மத்திற்காக நம் தமிழர்கள் உரிமையை விட்டுக் கொடுக்கிறது என்று சொல்வதா?இது ஏதோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சி என்கிற காரணத்தினால் நாங்கள் இதை குற்றச்சாட்டாக சொல்லவில்லை.

அணையின் நீர் நிர்வாகம் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசு நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது, அணை கட்டுமான பகுதி நீர் சேமிப்பு பகுதி கேரளா அரசுக்கு சொந்தமாக இருந்தாலும், நீர் நிர்வாக பராமரிப்பு முழுவதும் தமிழகம் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

ஆனால் இன்றைக்கு அணை பராமரிப்பு பணிகளுக்காக, கட்டுமான பொருளை கொண்டு செல்ல கேரளா வனத்துறைக்கு கடந்த மாதம் தமிழக நீர்ப்பாசன துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளார்கள். அதனை தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி தமிழக அதிகாரிகள் ரெண்டு கனரக வாகனங்களில் கட்டுமான பொருட்களை கொண்டு சென்றனர் அந்த வாகனங்கள் கேரள வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர் ,இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேரளா சிறு நீர் பாசன துறை, அணையை பராமரிக்க கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கி உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சி தலைவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுபோன்ற அனுமதி பெறுவது என்பது தமிழகம் ஏற்கனவே பெற்று வந்த உரிமையை, கேரளா அரசு அபகரிக்க வழிவகுப்பதாக உள்ளது, ஆகவே உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையிலான இந்த சட்ட விரோதமான நடவடிக்கைகள் என்பது மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வருவதைப் போன்று, ,பூஜ்ஜியத்தில் இருந்து நம் உரிமைப் போராட்டத்தை தொடங்குவதைப் போல இன்றைக்கு இருக்கிறது.

ஆகவே இன்றைக்கு உச்ச நீதிமன்ற வழங்கிய வழிகாட்டுதலை இரண்டு அரசுகளும் முறையாக கடைபிடிக்க வேண்டும், ஆகவே பராமரிப்பு பணி என்பது தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது, இன்னைக்கு அனுமதியைப் பெற வேண்டும் என்கிற புதிய நடைமுறையை கேரளா அரசு இன்னைக்கு கொண்டு வருகிறது, அதை தமிழக அரசு மவுனமாக அதை அவதித்து ஏற்றுக் கொள்கிறது என்று சொன்னால், தமிழகத்தில் உரிமையை காவு கொடுப்பதற்கு எப்படி கச்சத்தீவு திமுக அரசு காவு கொடுத்ததோ, காவேரி உரிமையை எப்படி காவு கொடுத்ததோ ?அதைப்போல முல்லைப் பெரியாறு உரிமையும் காவு கொடுப்பதற்கு தயாராகிவிட்டதா? என்ற அச்சம் இன்றைக்கு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

சட்டமன்றத்தில் எடப்பாடியார் தென் மாவட்ட விவசாயிகளுக்காக உரிமைக்குரல் எழுப்பிய போது அதற்கு முதலமைச்சர் உரிய பதிலை தெரிவிக்கவில்லை அவர் மௌனம் காத்து கடந்து சென்றுவிட்டார்கள்?

ஆகவே இது ஒரு உயிர் நாடி பிரச்சனை இதற்கு முதலமைச்சர் வாய் மூடி மௌனியாக இருப்பது மர்மம் என்ன ?இந்த நான்கு ஆண்டு காலமாக ஒரு நாள் கூட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு முதலமைச்சர் வாய் திறக்காமல் மௌன விரதம் கடைபிடிப்பிடிப்பதின் மர்மம் என்ன? என்று விவசாயிகள் கேள்வி கேட்பதைத்தான் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் கேட்கிறார்

இன்றைக்கு விவசாய அச்சத்தை போக்கும் வகையில் புதிதாக அனுமதி பெற்று தான் பராமரிக்க வேண்டும் என்று புதிய அனுமதி அளித்ததற்கு உரிய விளக்கத்தை முதலமைச்சர் கூற வேண்டும்

இன்றைக்கு எடப்பாடியார் தலைமையில் முல்லைப் பெரியாறு உரிமையை நாங்கள் காப்போம், உரிமை நாங்கள் விட்டுத் தர மாட்டோம் ,அதிமுக முல்லைப் பெரியாறு பிரச்சனையில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்

,மீத்தேன் பிரச்சனை என்றாலும், கச்சைதீவிலே தொடங்கி, இன்றைக்கு பல்வேறு பிரச்சனைகளை திமுக தான் ஏற்படுத்தியது மேலூரில் டங்ஸ்டன் இதுவரைக்கும் அவர்கள் இன்னும் அந்த ஒப்பந்தக் கூடிய ரத்து செய்யவில்லை,

ஆனால் மௌனம் காத்து மத்திய அரசிலே இன்றைக்கு அதை வலியுறுத்துவதற்கு கூட இந்த திமுக ஸ்டாலின் கையாலான அரசு இன்னைக்கு தயாராக இல்லை என்ற நிலையை நாம் பார்க்கிறபோது, பொங்கி எழுந்து, தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசின் கையாளாக தனத்தால் இன்றைக்கு கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

ஒரு நாளும் ஜீவாத பிரச்சனையை என்றைக்கும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் விட்டுக் கொடுத்தது கிடையாது தமிழக உரிமை மீட்டெடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிற்கும், விவசாயிகள் வைத்த நம்பிக்கையை ஒரு நாள் வீண் போகாது அவர்கள் களத்தில் நாங்களும் இருப்போம், முல்லைப் பெரியாறு பிரச்சினையை காப்பதில் இனிமேலாவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மௌனம் கலைந்து வாய் திறக்க முன்வருவாரா? என கேள்வி எழுப்பினார்.