• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்?

ByA.Tamilselvan

Jun 29, 2022

அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமா அல்லது இபிஎஸ் பக்கமா என்பதுதற்போதைய கேள்வியாக உள்ளது.
ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஜூன் 23 நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் வரும் ஜூலை 11 ல் மீண்டும் பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ்,இபிஎஸ் இருவருமே தற்போது இந்தவிவகாத்தை நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ் பக்கம் இருப்பதாக சொல்லப்பட்டாலும்.தொண்டர் ஆதரவு ஓபிஎஸ்க்குத்தான் என தெரிகிறது. தமிழக முழவதும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மதுரை,தூத்துக்குடி,திருநெல்வலி, உள்ளிட்டபல இடங்களில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.இந்நிலையில் புதுக்கோட்டையில்எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும், அவரது எதிராக முழக்கமிடும் தங்கள் எதிர்ப்பைப் அதிமுகவினர்பதிவுசெய்தனர்.மேலும் அவரின் படத்தின் மீது விளக்குமாறு கொண்டு தாக்கியும்,செருப்பால் அடித்தும் தங்கள் கோபத்தை தொண்டர் வெளிப்படுத்தினர். இச்சம்பவம் இபிஎஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.