• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் யார்? நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் அல்லது துணைத் தலைவர் கல்பனா குழைந்தைவேல் ஆகிய இருவரில் யார் என குழப்பத்தில் ஆழ்ந்துள்ள உள்ள நகர மன்ற உறுப்பினர்கள்…

ByKalamegam Viswanathan

Oct 4, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை. நகர் மன்ற தலைவர் மௌனம் காப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், நகர மன்ற துணைத் தலைவர் நான் தான் நகர் மன்ற தலைவர் என கேக் வெட்டி கொண்டாடியதால் பரபரப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளது இதில் 38 இடங்களில் திமுக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் இராஜபாளையம் நகராட்சி கைப்பற்றியது நகர்மன்ற தலைவராக கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக திமுகவை சேர்ந்த ஒரு பெண் நகர மன்ற தலைவர் பதவியை கைப்பற்றியது .

நகர மன்ற தலைவராக பவித்ரா ஷியாம் செயல்பட்டு வருகிறார் துணைத் தலைவராக கல்பனா இருந்து வருகிறார் இந்த நிலையில் ராஜபாளையம் நகர் பகுதியில் அடிப்படை வசதி செய்வதிலும் ஒப்பந்தம் போடுவதிலும் அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்துவதாக கூறி கடந்த நகர மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையாளிடம் வாக்குறுதி ஈடுபட்டனர் இந்த நிலையில் அன்றைய கூட்டம் நகர்மன்ற தலைவர் முழுமையாக கூட்டத்தை முடிக்காமல் வெளியேறினார் ஆணையாளரும் பதில் சொல்லாமல் வெளியே சென்றார் இதனால் கவுன்சிலர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் நகர்மன்ற தலைவரின் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார் என கேள்வி மனதில் ஓடிய நிலையில் தற்போது நகர் மன்ற துணைத் தலைவர் நகர்மன்ற தலைவர் என்ற பெயரில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இந்த போட்டோ சமூக வலைதளவில் பரவி ராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா சியாமா அல்லது துணைத் தலைவர் கல்பனா குழந்தைவேல் இதில் யார் தலைவர் என குழப்பம் ஏற்படுகிறது மேலும் நகர மன்ற துணைத் தலைவர் கல்பனா நகராட்சி ஊழியர்களிடம் குறிப்பாக ஆறாவது மைல் நீர்த்தேக்கத்திற்கு சென்று உங்களது தேவையான விஷயங்களை என்னிடம் கூறுங்கள் நான் எம்எல்ஏ எம்பி ஆகியோரிடம் கூறி செய்து தருகிறேன் நகர்மன்ற தலைவர் பவித்த ராவை நீங்கள் ஒன்றும் பொறுப்பெடுத்த வேண்டாம் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இதனால் நகர்மன்ற தலைவர் யார் என்பது கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.