• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காளை பெயரை கேட்டதும் அப்பிட்டான வீரர்கள்-தில்லாக நின்ற ஒற்றை காளை

Byகாயத்ரி

Jan 17, 2022

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7.00 மணிக்கு தொடங்கியுள்ளது.

முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கிவைத்தனர். முதலில் முனியாண்டி கோயில் காளை உள்ளிட்ட கிராம கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து போட்டி காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் 700 காளைகளுடன், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த ஜல்லிக்கட்டில் பல மாடுகள் களத்தில் சந்தித்து வீரர்களை ஒரு கை பார்த்துவிடும். அந்த வகையில் மாத்தூரை சேர்ந்த பாலசந்திரன் என்ற உரிமையாளரருடைய மாட்டின் பெயரை கேட்டதும் வாரி சுருட்டிக்கொண்ட வீரர்கள் ஆள் ஆளுக்கு ஒரு பக்கம் தொங்கியபடி அலறி அடித்துக்கொண்டு ஓடி ஒளிந்துக்கொண்டனர்.

மாட்டை கண்டு அலறி அடித்த வீரர்களை எதிர்நோக்கி நின்ற அக்காளை எவனாவது சிக்குவானா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே நின்றது.எனக்கு ராஜாவானா வாழுறேனு அந்த மாடு கொடுக்கும் போஸில் அனைவரும் கதிகலங்கி நின்றனர்.ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவத்தில் இது இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் அங்கிருந்தவர்களையும் சிரிப்பில் ஆழ்த்தியது.