• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காத்துவாக்குல ரெண்டு காதல் எப்போது வருகிறது?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, டான்ஸ் மாஸ்டர் கலா உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.கொரோனா பரவல் காரணமாக படத்தை எப்போது வெளியிடுவது என்பதை தீர்மானிப்பதில் குழப்பம் நிலவியது 2021டிம்பர் மாதம் வெளியாவதாக இருந்தது.

ஆனால் கொரோனா 3வது அலை தொடங்கியதால் வெளியிட இயலாமல் போனது இந்த நிலையில் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார் இதுவரை அறிவித்து உள்ள ரீலீஸ் படங்களின் பட்டியலை பார்க்கும்போது இந்தப் படத்திற்கு தியேட்டர் கிடைக்குமா என்கிற அய்யப்பாடு இப்போதே எழுந்துள்ளது படத்தை விளம்பரபடுத்தும் நோக்கத்துடன் படத்தின் டீசர் பிப்ரவரி11ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.