• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வீல்ஸ் அண்ட் டீல்ஸ் எனும் கார்கள் விற்பனை மேளா..,

BySeenu

Dec 26, 2025

கோவையில் கடந்த பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்து வரும் கார்ஸ் 327 நிறுவனம் குறைந்த விலை கொண்ட கார்கள் முதல் நவீன சொகுசுகள் கார்கள் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கட லட்சுமி திருமண மண்டப வளாகத்தில் வீல்ஸ் அண்ட் டீல்ஸ் எனும் மாபெரும் யூஸ்டு கார் மேளாவை கார்ஸ் 327 நிறுவனத்தினர் துவக்கி உள்ளனர்..

இதற்கான துவக்க விழா கார்ஸ் 327 நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வேணு கோபால் தலைமையில் நடைபெற்றது.. ,

டிசம்பர் 26 ந்தேதி துவங்கி 28 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் முன்னனி நிறுவனங்களின் அனைத்து வகையான யூஸ்டு கார்களும் விற்பனைக்கு அணிவகுத்துள்ளன.

நடுத்தர விலையுள்ள கார்கள் துவங்கி உயர் தர சொகுசு கார்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்ட கார்கள் இங்கு விற்பனைக்கு காட்சி படுத்தி உள்ளதாகவும்,

சிறிய வகை பட்ஜெட் ரூ.1 லட்சம் கொண்ட கார்கள் முதல் ரூ.50 லட்சம் விலை கொண்ட சொகுசு கார்கள் வரை வாடிக்கையாளர்கள் நேரில் வந்து, தங்களுக்கு ஏதுவான கார்களை ஓட்டிபார்த்தும், சோதனை செய்தும் வாங்கி கொள்ளும் வகையில் இந்த மேளா நடைபெறுவதாக கார்ஸ் 327 தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வேணு கோபால் தெரிவித்தார்..

மேலும் இந்த மேளாவில் கார் வாங்குபவர்களுக்கு ஏராளமான சலுகைகளும்,
நல்ல முறையில் சர்வீஸ் வழங்க உள்ளதாக அவர் கூறினார்.