• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அர்த்தம் என்ன மாதிரியான படம்?

மினர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர் படம் பற்றி கதாநாயகன் மாஸ்டர் மகேந்திரன் கூறியதாவது…
நல்ல கண்டெண்ட் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் உழைத்துள்ளோம். என்னை நம்பி பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர்
இயக்குநர் மணிகாந்துக்கும் எனக்கும் சண்டை வந்ததே இல்லை. எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. என்னை நம்பி தமிழுக்கு வந்ததாக சொன்னார், நான் எங்கள் டெக்னீஷியன்களை நம்பலாம் என்றேன். படத்தை அழகாக எடுத்துள்ளார். ரோபோ, வினோத் எனக்காக நடித்து கொடுத்தார்கள். நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர் என்றார்
இயக்குநர் மணிகாந்த் தல்லகுடி கூறியதாவது..

இந்தப்படம் எனது முதல் தமிழ் படம். இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளோம். சென்னையில் தான் 70 சதவீதம் ஷீட் செய்தோம். ரோபோ சங்கர், வினோத் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள். மகேந்திரன் மிகப்பெரிய ஒத்துழைப்பை தந்தார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஷ்ரத்தா தாஸ் அழகான நடிப்பை தந்துள்ளார் என்றார்

நடிகை ஷ்ரத்தா தாஸ் கூறியதாவது..,

நான் 40 படங்களுக்கு மேல் தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் பெங்காலி படங்களில் நடித்துள்ளேன். நான் தமிழில் முதல் முறையாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. இப்படத்தில் சைக்காலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன். நான் சைக்காலஜி டிகிரி முடித்துள்ளேன். அதனால் நடிப்பு எளிதாக இருந்தது. கிளாமர் குறைவாக கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. மகேந்திரன் போன்ற அனுபவமிக்க நடிகருடன் நடித்தது மகிழ்ச்சி என்றார்

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது….

இந்த திரைப்படத்தில் நான் கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கேன். தம்பி மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் அற்புதமான நடிப்பை தந்தார். இந்தபடத்திலும் நன்றாக நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. நான் மிக விரைவில் இயக்குநராக பரிணாமம் எடுக்க போகிறேன் என்றார்