• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சாமானியரிடம் பட்ஜெட் என்ன சாதித்தது ?

நேற்றைய தினம் மத்திய பட்ஜெட்டினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். ஒன்னரை மணி நேரமாக பட்ஜெட் உரையை வாசித்து முடித்து இந்த பட்ஜெட் 25 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டது என்றும் பெருமை பட கூறினார்.

தற்போது இந்த பட்ஜெட் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார் பட்ஜெட் எதற்கு தாக்கல் செய்யப்படுகிறது இதனால் நமக்கு என்ன பயன் என்ற பல்வேறு கேள்விகளுக்கு இன்றளவுக்கும் பதில் தெரியாமல் அதனை சாமானிய மக்கள் கடந்து செல்கின்றனர். ஆனால் முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு பட்ஜெட் மக்கள் மத்தியில் ஒரு சில தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறலாம்.

கொரோனா காலகட்டத்தில் மக்கள் பாதுகாத்து , அரவணைத்து செல்ல வேண்டிய அரசு மக்களை எப்படி கையாண்டது.மக்களிடம் பண புழக்கத்தை ஏற்படுத்தாமல் தற்சார்பு பொருளாதாரம் பேசியது ,ரேஷனில் கோதுமை அரிசி என வழங்கியது. மத்திய அரசிடம் இருந்து நிவாரண தொகை கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது என பல்வேறு சம்பவங்களை மக்கள் நேரிடையாக அனுபவித்தனர்.

இந்த அனுபவம் நேற்றைய பட்ஜெட்டிலும் எதிரொலித்தது. ஆம் இந்த பட்ஜெட்டில் சாமானியருக்கு பயன்பெறும் வகையில் எந்த அறிவிப்பும் இல்லை. ஒரே நாடு ஒரே பதிவு , 80லட்சம் மக்களுக்கு வீடு , கிராமம் தோறும் இணைய வசதி , மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி , இப்படி மக்களை கவர்ந்து இழுக்க கூடிய திட்டங்கள் தான் வெளியானது. இதனால் தென்கடைக்கோடியில் இருக்க கூடிய மக்கள் பயனடைவார்களா என்பது கேள்விக்குறி?

இவர்கள் திட்டத்தை அறிவிப்பதுடன் மறந்துவிடுகிறார்கள். இயற்கை சீற்றம் காரணமாக பயிர்கள் பெருமளவில் பாதிக்கபட்டால் மத்திய அரசு சார்பிலும் நிவாரணம் வழங்க வேண்டி உள்ளது.அதற்கு வந்து பார்வையிட்டு செல்பவர்கள் நிதியினை ஒழுங்காக மக்களிடம் கொண்டு சேர்ப்பார்களா?. மிகப்பெரிய பிரச்சனையை எழுப்பியது கார்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகையை 12 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
இது குறித்து தமிழகத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவிற்கு பின்னால் எழுதியிருந்த வாசகம் கூட தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பட்ஜெட் சிறு குறு தொழில் முனைவோருக்கு ஏமாற்றம் கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிசலுகை அறிவித்து.சொந்த மக்களிடம் அதிக வரிவசூலித்ததாக பெருமை படுவது.வரிவருவாய் அதிகம் உள்ளது ஆனால் பொதுத்துறைகளை மிகக்குறைந்த விலையில் விற்க துடிப்பது ஏன்? யார் நலனில் அக்கறை மக்களே சிந்திப்பீர் என்று எழுதபட்டிருந்தது.

இவர் கூறுவது போல கார்பரேட் நிறுவனங்களுக்கு ஏன் வரிசலுகை? தற்சார்பு பொருளாதாரம் குறித்து நாம் பேசும் போது ஏன்அனைத்தையும் கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டும். இது குறித்து பதில் அளித்த பாஜக பிரமுகர் ஒருவர் கூட ஏன்கார்பரேட் என்பது கெட்ட வார்த்தையா அதனை கூறக்கூடாதா நாம் கார்பரேட் வாழ்க்கை முறையை தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்.

இப்போது கேள்வி என்னவென்றால் கார்பரேட் இருக்கிறது என்றால் பிறகு அரசு எதற்கு , கார்பரேட் சாராமல் பாபா ராம்தேவ்வால் ஆரம்பிக்கப்பட்ட பதஞ்சலி நிறுவனம் எப்படி கார்பரேட் நிறுவனமாக உருவகபடுத்தியது. ஏன் தற்சார்பு பொருளாதாரத்தால் பதஞ்சலி பொருட்களை சாமானியர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை.

ஒரு பட்டதாரி மனிதனுடைய சராசரி வருமானம் 10 ஆயிரம் ரூபாய் வளர்ச்சியடைந்த நகரங்களில்,தென் மாவட்டங்களில் அதற்கும் கீழ் தான் உள்ளது. இந்த நிலை மாற அனைவருக்குமான திட்டம் என்ன உள்ளது. மேக் இன் இந்தியா ,டிஜிட்டல் இந்தியா என பல திட்டங்களின் கீழ் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்த அரசு அதனை நிறைவேற்றியதா ?அப்படி நிறைவேற்றி இருந்தால் இந்த ஆண்டும் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. மத்திய நிதியமைச்சரிடம் இந்த பட்ஜெட்டில் சாதாரண மாத வருமானம் வாங்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்று செய்தியாளர் கேட்டதற்கு , வரி ஏதும் நாங்கள் உயர்த்தவில்லை, இன்னும் வரியை அதிகரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என நக்கல் செய்யும் விதமாக தான் பதிலளித்தார்.

மக்களுக்கு பட்ஜெட் குறித்து என்ன தெரிய போகிறது என்ற நிலைபாட்டில் தான் இது போன்ற பதில்கள் வருகின்றன.ஆனால் அதனை கடந்து தற்போது கேள்வி கேட்க துவங்கியுள்ளனர்.