• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமிங்கில விமானம் சென்னையில் தரையிறங்கிய வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Jul 12, 2022

உலகின் மிகபிரமாண்டமான சரக்குவிமான ஏர்பஸ் பெலுகா முதன்முறையாக சென்னையில் தரையிரங்கியது.
இந்த விமானம் மிகபிரமாண்டமான திமிங்கலத்தைபோல இருப்பதால் இதனை திமிங்கல விமானம் என அழைக்கின்றனர்.இந்த மிகப்பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான, “ஏா்பஸ் பெலுகா” முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக வைத்து, ஏர்பஸ் விமானம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுவதாவது, ‘ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து, சென்னைக்கு நேற்று காலை வந்தது. விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக இந்த சரக்கு விமானம் வந்தது. இந்த வகை பெரிய சரக்கு விமானம், சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை. குஜராத்திலிருந்து தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கியது. சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பட்டாயாவிற்கு புறப்பட்டு சென்றது.’என்றார்