காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. பனிப்பொழிவு காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளதால் அவர்களுக்காக படகு வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு வரவேற்க தயாராக உள்ளன. காஷ்மீரில் குல்மார்க் பகுதியில் நேற்று மைனஸ் 7 டிகிரி குளிர் பதிவானது.

இதற்கிடையே உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலை பனி சூழ்ந்து காணப்படுகிறது.