விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் நள்ளிரவில் தொடர்ந்து மழை பெய்தது.
அதன் காரணமாக எலுமிச்சங்காய்பட்டி, அன்பின் நகரம் ,கிருஷ்ணாபுரம் ,வெள்ளையாபுரம்,மார்க்கநாத புரம், கிழச்செல்லையாபுரம், எலுமிச்சங்காய் பட்டி,சோலைபட்டி, தூங்கா ரெட்டிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சீனி அவரைக்காய், கத்திரிக்காய், பாகற்காய் , உள்ளிட்ட காய்கறி பயிர்கள் மற்றும் உளுந்து ஆகியவை சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக தோட்டத்தில் அதிகளவு களை வளர்ந்ததால் களையை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கீழச் செல்லையாபுரம் விவசாயி சுந்தரமூர்த்தி கூறியது
கீழச்செல்லையாபுரம், அன்பின் நகரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் சீனி அவரைக்காய், கத்தரிக்காய், ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது.
கிணற்றில் ஓரளவு தண்ணீர் இருந்தாலும் சொட்டு நீர் பாசனம் மூலம் செடிகளுக்கு தண்ணீர் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தோட்டத்தில் களை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோடை மழையை நம்பி இப்பகுதி விவசாயிகள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறோம் என கூறினார்.




