ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்புமொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் உட்பட பல பேரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் மாநிலஉரிமை மற்றும் மொழியுரிமை காப்பதற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் “மாநில உரிமை, மொழி உரிமை காக்க கண்ணும் கருத்துமாக திமுக-வினர் தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தை வளர்த்தெடுப்பதோடு, அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். இந்திய ஒன்றியத்தில் எவராலும் தவிர்க்க இயலாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம். அதன்பின் தமிழ்மொழி, தமிழ்மக்கள், தமிழ்நாடு போன்ற மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு திமுக பயணிக்கிறது” என்று அதில் தெரிவித்துள்ளார்.